Advertisment

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை வகுப்பு தேர்வாக நடத்த வேண்டும்! தமிமுன் அன்சாரி

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை வகுப்பு தேர்வாக நடத்த வேண்டும் என்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும், நாகை எம்.எல்.ஏ.வுமான மு.தமிமுன் அன்சாரி கூறியுள்ளார்.

Advertisment

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கரோனா நோய்த்தொற்று காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்தேன். எனது கோரிக்கையை ஏற்கும் வகையில் பத்தாம் வகுப்பு தேர்வை ஒத்திவைக்கும் முடிவை முதல்வர் அறிவித்தார்.

Advertisment

10th exam

தற்போது கரோனா தொற்று அச்சுறுத்தல் ஓயாத நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்துவது குறித்து பல்வேறு சிக்கல்கள் உருவாகியுள்ளது. இதனால் பதினோராம் வகுப்பில் தகுதி அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுவதில் நடைமுறை சிக்கல் உள்ளது.

nakkheeran app

எனவே ஊரடங்கு நாட்கள் முடிந்த பின்னர், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை வகுப்பு தேர்வுகளாக நடத்தி பள்ளி ஆசிரியர்களே விடைத்தாள் திருத்தும் பணியை மேற்கொண்டு மதிப்பெண்களை உடனடியாக வெளியிடும் நடவடிக்கை மேற்கொண்டால் எந்தவித தேக்கமும் இருக்காது.

கால தாமதம் இன்றி பதினோராம் வகுப்பு சேர்க்கையை நடத்த ஏதுவாகவும் இருக்கும்.இது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறோம் என கூறியுள்ளார்.

statement MLA tamimmun ansari 10th exam corona virus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe