/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/aZSXDCFGASDF_0.jpg)
தமிழகத்தில் ஜூன் 15 ந்தேதி முதல் 25ந்தேதி வரை 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என பள்ளிகல்வித்துறை அமைச்சரான செங்கோட்டையன் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு கல்வியாளர்களை, பெற்றோர்களை அதிருப்தியடைய செய்துள்ளது. கரோனா தமிழகத்தில் கட்டுப்பாட்டுக்குள் வராமல் 13000 பேரை பாதித்துள்ளது. தினமும் சராசரியாக 600 பேருக்கு மேல் புதிய கரோனா நோயாளிகள் உருவாகிறார்கள். இதனைத்தடுக்காமல் பத்தாம் வகுப்பு தேர்வு நடத்துவது என்பது மேலும் மாணவ – மாணவிகளை பயம் ஏற்படுத்தும், அதனால் கரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்தபின்பு தேர்வு நடத்த வேண்டும் என்கின்றனர்.
10 ஆம் வகுப்பு தேர்வு தற்போது அவசியமா என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இரண்டு தினங்களுக்கு முன்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து இளைஞரணி மற்றும் மாணவரணியுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாடிய திமுக மாநில இளைஞரணி அமைப்பாளர் உதயநிதி ஸ்டாலின், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் கலந்துரையாடல் நடந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து திமுக தலைவரும், இளைஞரணி அமைப்பளரும் உத்தரவிட்டதன் அடிப்படையில், திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி எம்.பியும், தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளருமான அண்ணாதுரை, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் காலேஜ்.ரவி மற்றும் மாணவரணி, இளைஞரணியின் மாவட்ட நிர்வாகிகள், திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை சந்தித்து, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கரோனா காலத்தில் நடத்தினால் மாணவ – மாணவிகள் சரியாக எழுதமாட்டார்கள். அதனால் தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என மனு தந்துள்ளனர். இதேபோல் தமிழகத்தின் அனைத்து மாவட்ட இளைஞரணி மற்றும் மாணவரணி நிர்வாகிகள் கல்வி அலுவலர்களை சந்தித்து மனு தரச்சொல்லி தலைமை உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)