Advertisment

10-ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய்து அரசாணை தாக்கல்! -தள்ளிவைக்கக்கோரிய வழக்குகள் முடித்து வைப்பு!

10th exam canceled-Highcourt-TN Govt

Advertisment

கரோனா பரவலைதடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, கடந்த மார்ச் மாதம் நடைபெற இருந்த பத்தாம் வகுப்புதேர்வுகள் ஜூன் 15-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், தொற்று பரவல் குறையாததால், தேர்வுகளை இரண்டு மாதங்களுக்கு தள்ளிவைக்கக்கோரி இந்திய மாணவர் சங்க நிர்வாகி மாரியப்பன், ஈரோட்டைசேர்ந்த மாணவியின் தந்தை மாரசாமி, கடலூரைசேர்ந்த இளங்கீரன், தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கதலைவர் பக்தவச்சலம் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்திருந்தனர்.

இதில், தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ் குமார் அடங்கிய அமர்வு, 9 லட்சம் மாணவர்கள், 2 லட்சம் ஆசிரியர்களின் உயிர் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், தேர்வை ஜூலை மாதத்துக்கு தள்ளிவைப்பது குறித்து பரிசீலிக்கும்படி கூறி, விசாரணையை இன்றைக்கு தள்ளிவைத்திருந்தது.

Advertisment

இந்நிலையில் இன்று, இந்த வழக்குகள் மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, பத்தாம் வகுப்பு தேர்வை ரத்து செய்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை, தமிழக அரசுதரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. இதைப் பதிவு செய்த நீதிபதிகள், பத்தாம் வகுப்பு தேர்வை தள்ளிவைக்கக்கோரிய வழக்குகளை முடித்து உத்தரவிட்டனர்.

tn govt highcourt 10th exam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe