Advertisment

10 வகுப்பு மாணவி கர்ப்பம்; காதலன் தலைமறைவு

Advertisment

10th class student pregnant  Karaikudi

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள புதுவையில் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (20). வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்து வரும்முத்துக்குமார் பக்கத்துக்கு கிராமத்தில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியைகாதலித்து வந்துள்ளார். மேலும் இருவரும் தொடர்ச்சியாக தனிமையில் இருந்துள்ளதால், மாணவி கர்ப்பமடைந்துள்ளார்.

Advertisment

இதனைத்தொடர்ந்துவீட்டில் இருந்த 10 ஆம் வகுப்பு மாணவி திடீரென காணாமல் போயுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் அக்கம்பக்கத்தில் விசாரித்துள்ளனர். எங்கு தேடியும் கிடைக்காததால் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில்பக்கத்து ஊரில் உள்ள கிணற்றுக்கு அருகே மாணவி மயங்கி கிடப்பது தெரியவந்ததையடுத்து, போலீசார் அவரைமீட்டு காரைக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்துவிசாரணையில், முத்துக்குமார் மாணவியை அழைத்து வந்து குடும்பம் நடத்தியதாகவும், திடீரென அவர் அந்த மாணவியை விட்டுவிட்டு ஓடிவிட்டதாகவும், அதனால்தான்அந்த மாணவி பூச்சி மருந்துகுடித்து தற்கொலைக்கு முயன்றதும்தெரியவந்தது. அதன்பேரில் முத்துக்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டு தீவிரமாகத்தேடி வருகின்றனர்.

Karaikudi police
இதையும் படியுங்கள்
Subscribe