இன்று தொடங்குகிறது 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு

 10th class general exam starts today

12 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் முடிந்தநிலையில் இன்று பத்தாம் வகுப்புபொதுத்தேர்வு தொடங்க இருக்கிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று தொடங்கும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்காக 4,207 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் 20 ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெற இருக்கின்றன. 9,96,089 மாணவ மாணவியர்கள் எஸ்எஸ்எல்சி தேர்வை எழுதுகின்றனர். அதில் 37,798 பேர் தனித்தேர்வர்கள்,264 பேர் சிறைவாசிகள், ஐந்து பேர் மூன்றாம் பாலினத்தவர்.

தனித்தேர்வர்களுக்காக 182 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு மையங்களில் குடிநீர், தடையற்ற மின்சாரம், கழிவறை வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 10 மணிக்கு தேர்வுகள் தொடங்கி பிற்பகல்1.15 மணி வரைநடைபெறும். முறைகேடுகளைத் தடுக்க பறக்கும் படை, கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

examination Puducherry Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe