'பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுக்குப் பிறகே பள்ளிகள் திறக்கப்படும்'- அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி!

10th board exam tamilnadu minister kasengottaiyan pressmeet at erode

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், "பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடக்கும். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான பிறகே பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனை செய்யப்படும். அதேபோல் பெற்றோர், கல்வியாளர்களுடன் ஆலோசனை செய்த பின் பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிக்கப்படும். கரோனா பரவல் அச்சுறுத்தல் உள்ளதால் பெற்றோர், மாணவர்களிடம் கருத்துக் கேட்கப்படும். பாடங்களைக் குறைப்பது குறித்து 16 பேர் கொண்ட உயர்மட்டக் குழு ஆலோசித்து வருகிறது" என்றார்.

இதனிடையே வரும் ஜூன் 8- ஆம் தேதிக்குள் பணிசெய்யும் மாவட்டத்திற்கு ஆசிரியர்கள் வர பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் ஆசிரியர்களின் வருகையைத் தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

10th board exam minister sengottaiyan Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe