தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டு முதல் 10- ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மொழிப் பாடங்களுக்கு இனி ஒரே தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
Advertisment
10- ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் விருப்பமொழி பாடம், ஆங்கில மொழி தேர்வுகள், முதல் தாள், இரண்டாம் தாள் என தேர்வுகள் நடத்தப்பட்டு வந்த நிலையில், இந்த முறையை மாற்றி தமிழுக்கு ஒரு தேர்வும், ஆங்கிலத்திற்கு ஒரு தேர்வும் மட்டுமே இனி நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.