10th, 12th class general examination results to be released on June 20!

Advertisment

10 மற்றும் 12- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் ஜூன் 20- ஆம் தேதி அன்று வெளியாகும் என்று தமிழக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "2022- ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற 2021- 2022 ஆம் கல்வியாண்டிற்கான 12- ஆம் வகுப்பு மற்றும் 10- ஆம்வகுப்புத்தேர்வு முடிவுகள் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரால் வரும் ஜூன் 20- ஆம் தேதி அன்று அண்ணா நூற்றாண்டுகூட்டரங்கில்வெளியிடப்படவுள்ளது.

வரும் ஜூன் 20- ஆம் தேதி அன்று காலை 09.30 மணிக்கு 12- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவும், பகல் 12.00 மணிக்கு 10- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவும் வெளியிடப்படவுள்ளது. www.tnresults.nic.in,www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளைஅறிந்துகொள்ளலாம். மேலே குறிப்பிட்டுள்ள இணையதளப்பக்கத்திற்குச்சென்று பதிவெண் மற்றும் பிறந்த தேதியைப் பதிவு செய்துஎளிதாகத்தேர்வு முடிவுகளைத்தெரிந்துகொள்ளலாம்.

Advertisment

பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ளகைப்பேசிஎண்ணுக்கும், தனித்தேர்வர்களுக்கும்ஆன்லைனில்விண்ணப்பிக்கும்போது வழங்கியகைப்பேசிஎண்ணிற்குக்குறுஞ்செய்திவழியாகத்தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10- ஆம் வகுப்புத் தேர்வு முடிவு நாளை வெளியாகியிருந்த நிலையில், தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.10- ஆம் வகுப்பு மற்றும் 12- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் முதல்முறையாகஒரேநாளில்வெளியிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.