Advertisment

29 நிமிடத்தில் 108 யோகாசனம்! உலக சாதனை படைத்த மாணவன்! 

Advertisment

சிதம்பரம் சிவசக்தி நகரைச் சேர்ந்த அருள்- ஹேமா தம்பதியின் மகன் சக்திவேல்(13). இவர் காமராஜர் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் சிறுவயதிலிருந்தே யோகாசனத்தில் மிகுந்த ஆர்வத்துடன் இருந்துள்ளார். இதனையறிந்த பெற்றோர்களின் ஏற்பாட்டில் சிறு வயதிலிருந்து யோகாசனத்தை கற்று வந்துள்ளார்.

இந்த நிலையில் சிதம்பரம் மேலவீதியில் வெள்ளிக்கிழமையன்று வெர்ட்சு புக் ஆப் வேர்ல்டு ரெகார்டு சார்பில் யோகாசனத்தில் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாணவன் சக்திவேல் கலந்து கொண்டு 29 நிமிடம் 47 வினாடிகளில் 108 யோகாசனங்களைச் செய்து உலக சாதனை படைத்துள்ளதாக வெர்ட்ஜ புக் ஆப் வேர்ல்டு ரெகார்டு இயக்குநர் சுரேஷ்குமார், இணை இயக்குநர் சந்தோஷ் ஆகியோர் அறிவித்தனர்.

சாதனைபடைத்த மாணவனுக்கு சர்வமங்களா அகாடமி நிறுவனத்தின் நிறுவனர்கள் பாலாஜி, சுகாந்தினி யோகா ஆசிரியர் தெய்வானை, காமராஜர் பள்ளியின் தாளாளர் கஸ்தூரி, முதல்வர் சக்தி, ஆகியோர் மாணவனுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கத்தை வழங்கி வாழ்த்துகளைத்தெரிவித்தனர். இதனையறிந்த மாணவனுக்கு நண்பர்கள், சகமாணவர்கள் உறவினர்கள் திருமாவளவன், வரகுணபாண்டியன் உள்ளிட்ட அனைவரும் வாழ்த்துகளைத்தெரிவித்து ஊக்கப்படுத்தினார்கள்.

Chidambaram
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe