108 A male nurse who gave birth in an ambulance

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா அமரசேந்திரபுரம் கிராமத்தைச் சேர்ந்த கூத்தையா மனைவி சுதேசி. நிறைமாத கர்ப்பிணியான சுதேசிக்கு அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டதால் அத்தாணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்வதற்காக 108 ஆம்புலன்ஸைஅழைத்துள்ளனர்.

Advertisment

தஞ்சை மாவட்டம் பேராவூரணி வட்டம் சேதுபாவாசத்திரம் 108 ஆம்புலன்ஸ் வேகமாக சென்று சுதேசிக்கு தேவையான முதலுதவி சிகிச்சை செய்து பின்பு அவரை அத்தாணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லும்போது திடீரென பிரசவ வலி அதிகமானதால் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஜெயச்சந்திரன் ஆம்புலன்ஸைசாலை ஓரமாக நிறுத்தினார்.

Advertisment

108 இல் அவசர மருத்துவ உதவிக்கான ஆண் செவிலியர் செல்வகுமார் உடனடியாக சுதேசிக்கு பிரசவம் பார்த்தார். சிறிது நேரத்திலேயே சுதேசிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அதன் பிறகு சுதேசியையும் அவரது குழந்தையையும் அத்தாணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். தாயும் சேயும் நலமாக உள்ளனர். பிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு தான் ஒரு ஆண் செவிலியர் என்றாலும் கூட உரிய நேரத்தில் பிரசவம் பார்த்த108 ஆம்புலன்ஸ் செவிலியர் செல்வக்குமார், ஓட்டுநர் ஜெயச்சந்திரன் ஆகியோருக்கு சுதேசியின் உறவினர்களும் பொதுமக்களும், மருத்துவமனை ஊழியர்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.