திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் டூ ஜோலார்பேட்டை சாலையில் திருப்பத்தூரை நோக்கி 108 ஆம்புலன்ஸ் பிப்ரவரி 16ந் தேதி மாலை 5 மணிக்கு வந்துள்ளது. அப்படி வந்த ஆம்புலன்ஸ் பிரேக் பிடிக்காததால் தமலேரி முத்தூர் கூட்ரோடு என்ற இடத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இந்த 108 ஆம்புலன்ஸ் முன்னே சென்றுக்கொண்டிருந்த வாகனங்கள் மீதி மோதியது. இதில் 4 பேர் படுகாயமடைந்தனர்.

Advertisment

108 ambulance crashing into head ... 4 injured

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

மோதிய ஆம்புலன்ஸ் பிரேக் பிடிக்காமல் தலைக்குப்புற கவிழ்ந்தது. ஆம்புலன்ஸால் அடிப்பட்டவர்களையும், ஆம்புலன்ஸ் விபத்தாகி அடிப்பட்டவர்களை அச்சாலை வழியாக சென்ற பயணிகள், பொதுமக்கள் மீட்டு அவர்களை உடனடியாக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்த விபத்துக்கு காரணமே போலீஸார், தேசிய நெடுஞ்சாலையில் நின்றுக்கொண்டு வாகனசோதனை நடத்துவதால் போலீஸாரிடமிருந்து தப்பிக்க வாகனத்தை வேகமாக ஓட்டியதால் தான் இந்த விபத்து நடந்தது என காவல்துறையினரிடம் பொதுமக்கள் வாக்குவாதம் செய்தனர்.

Advertisment

ஆனால் போலீசார்தரப்பில் குடிபோதையால் தான் அதிக வாகன விபத்து நடக்கிறது, அதனை குறைக்கவே வாகனசோதனை நடத்துகிறோம் என காரணம் சொல்ல, பொதுமக்கள் அதனை ஏற்றுக்கொள்ளாமல் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் போலீஸார் பொதுமக்களை மிரட்டிய கலைய செய்தனர்.

இந்த விபத்து தொடர்பாக ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.