108 ஆம்புலன்ஸ் விபத்தில் செவிலியர் பலி: சந்தேகம் என உறவினர்கள் புகார்

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி தாலுக்காவில் 108 ஆம்புலன்ஸ் வாகனம் உள்ளது. இந்த ஆம்புலன்ஸ் வாகனத்தில் டிரைவர் ஒருவரும், செவிலியராக 30 வயதுள்ள வரலட்சுமி என்பவரும் பணியாற்றி வந்தனர். நேற்று குறிஞ்சிப்பாடியில் விபத்தில் சிக்கியவரை கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்க இந்த ஆம்புலன்ஸ் வாகனத்தில் வரலட்சுமி சென்றுள்ளார். பின்னர் கடலூரில் இருந்து குறிஞ்சிப்பாடிக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனம் திரும்பும்போது கொல்லங்சாவடி அருகே லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் செவிலியர் வரலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். டிரைவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்தில் சந்தேகம் உள்ளது என்று வரலட்சுமியின் உறவினர்கள் குறிஞ்சிப்பாடி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீசார் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வரலட்சுமியின் கணவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு காலமானார். வரலட்சுமிக்கு 9 வயதில் திருநாதன் என்ற மகனும், 7 வயதில் ரசிதா என்ற மகளும் உள்ளனர்.

108 ambulance accident Kurinjipadi
இதையும் படியுங்கள்
Subscribe