மக்களவை தேர்தல் தேதி அறிவித்த நாளில் இருந்து தேர்தல் பறக்கும் படையினர் நாடு முழுவதும் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் தமிழகத்தில் நேற்று வரை கணக்கில்வராத சுமார் 107 . 24 கோடி மதிப்பிழான பணம் மற்றும் பொருட்களை தேர்தல் பறக்கும் படை கைப்பற்றியது என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில் தற்போது வெளியீட்டு புது பட்டியலில் தமிழகத்தில் கணக்கில்வராத சுமார் 41.44 கோடி ரூபாய் பணம் மற்றும் தங்கம் , வெள்ளி பொருட்கள் , மற்ற பொருட்கள் உள்ளிட்டவை சேர்த்து மொத்தம் 112. 47 கோடியை பறிமுதல் செய்ததாக தற்சமயம் இந்திய தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் வெளியீட்டுள்ளது.
இதனால் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் பணம் புழக்கம் அதிகம் என்பது குறிப்பிப்பிடத்தக்கது. இந்நிலையில் கணக்கில்வராத பணம் பறிமுதலில் உத்தரபிரதேசம் சுமார் 108.61 கோடி மதிப்பிழான பொருட்கள் பறிமுதல் செய்தது தேர்தல் ஆணையம். அதனை தொடர்ந்து மூன்றாவது இடத்தில் ஆந்திர பிரதேசம் சுமார் 103.4 கோடி மதிப்பிழான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்தது என இந்திய தேர்தல் ஆணையம் வெளியீட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்தது. இந்தியாவில் மொத்தம் பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் பொருட்கள் மதிப்பு 562.392 கோடி ஆக உயர்ந்துள்ளது. எனவே நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பணம் புழக்கங்களை கட்டுப்படுத்த விரைவில் பல அதிரடி உத்தரவுகளை பிறப்பிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பி.சந்தோஷ் , சேலம் .