/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/540_4.jpg)
அரியலூர் மாவட்டத்தில் வறுமையில் சிரமப்படும் 105 வயது மூதாட்டி ஒருவருக்கு, காவல்துறை கண்காணிப்பாளர் (SP) நேரில் சென்று தேவையான உதவிகளைச் செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம், தட்டாஞ்சாவடி கிராமத்தை சேர்ந்தவர் 105 வயது காசியம்மாள். இவரது கணவர் 40 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு 4 மகன்கள், 2 மகள்கள்.அனைவரும் திருமணமாகி தனித்தனியே வசிக்கின்றனர் இவரது மகன்களுக்குப் போதிய வருமானம் இல்லாததால் தாயை கவனிப்பதில்லை.
இதனால் அரசு புறம்போக்கு நிலத்தில் குடிசை வீட்டில் தனியாக வசித்து வந்த காசியம்மாள் அன்றாட உணவுக்கே மிகுந்த சிரமப்பட்டு வந்துள்ளார். இவருக்கு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அவ்வப்போது சாப்பாடு கொடுத்து வந்துள்ளனர். தற்போது சமூக ஆர்வலர்கள் சிலர் நிவாரணப் பொருட்கள் வழங்கியுள்ளனர்.
இது சம்பந்தமான தகவல் அரியலூர் மாவட்ட காவல்துறைகண்காணிப்பாளர் சீனிவாசன் கவனத்திற்குசென்றுள்ளது. அவர் காசியம்மாள் வசித்துவந்த இடத்திற்கு நேரில் சென்று, அவருக்கு மளிகை பொருட்கள், காய்கறிகள், அரிசி உட்பட தேவையான உதவிகளைச் செய்து கொடுத்துள்ளார். மேலும் தேவையான உதவிகள் செய்து தருவதாகவும் தெரிவித்துள்ளார். காவல்துறை அதிகாரி நேரடியாகசென்று ஏழை மூதாட்டிக்கு உதவி செய்யுதுள்ளது அப்பகுதி மக்களுக்கு மன நெகிழ்வை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)