10.5 per cent reservation case is coming up for hearing tomorrow

Advertisment

வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்குகள் நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் கண்ணம்மாள் அமர்வு முன் நாளை விசாரணைக்கு வர உள்ளது. மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி முந்தைய ஆட்சியில் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்டத்தை எதிர்த்து ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு சில மணி நேரம் முன், அரசியல் லாபத்துக்காகச் சட்டம் இயற்றப்பட்டதாக அந்த மனுக்களில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. மக்கள் தொகை விகிதத்தின் அடிப்படையில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதாகத் தமிழக அரசுத்தரப்பில் பதிலளிக்கப்பட்டது.

தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி அமர்வில் கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வழக்குகளின் விசாரணையிலிருந்து விலகுவதாக நீதிபதி ஆதிகேசவலு அறிவித்தார். இதையடுத்து புதிய அமர்வு, இவ்வழக்குகளை விசாரிக்கும் எனத் தலைமை நீதிபதி அறிவித்திருந்தார். அதன்படி, வன்னியர் இட ஒதுக்கீட்டை எதிர்த்த வழக்குகளை விசாரிக்க நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் கண்ணம்மாள் அடங்கிய அமர்வு அமைக்கப்பட்டுள்ளது.