10.5 சதவிகித இடஒதுக்கீடு... பாஜக என்ன சொல்லப் போகிறது? - ப.சிதம்பரம் ட்வீட்!

10.5 per cent reservation .... What is the BJP going to say? -P Chidambaram tweet!

தமிழகத்தில் 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல், வேட்புமனு தாக்கல் என அனைத்தையும் முடித்து தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இறுதியாக நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில் கூட்டுறவு வங்கிக் கடன் தள்ளுபடி, வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு போன்ற பல்வேறு அறிவிப்புகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் வன்னியர்களுக்குஇடஒதுக்கீடு வழங்கியது பேசுபொருளானது.

நேற்று (30.03.2021) தேர்தல் பிரச்சாரத்தில் துணைமுதல்வர் ஓபிஎஸ், ''வன்னியர்களுக்கான10.5 சதவீத இடஒதுக்கீடு தற்காலிகமானதே. சாதிவாரியாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டபிறகு, வன்னியர்களுக்கான இடஒதுக்கீடுஉறுதியாகும். குழு தரும் அறிக்கையின் அடிப்படையில் வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு கூடுவதற்கும், குறைவதற்கும் வாய்ப்புள்ளது'' என்றார். இதற்கு முன்பேஅமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இதேபோன்ற கருத்தைதெரிவித்திருந்தார்.

''இந்தச் சட்டம் தற்காலிகமானது எனச் சமூகநீதிதெரியாத சிலர் பேசிவருகின்றனர். தற்காலிகச் சட்டம் என்று ஒன்று இல்லை. மாறாக, மற்றொரு சட்டம் கொண்டுவரும் வரை பழைய சட்டம் நீடிக்கும்'' என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இதுகுறித்து கருத்து ஒன்றை முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், ''10.5 சதவீத உள்ஒதுக்கீடு தற்காலிகமானது எனத் துணை முதல்வர் கூறுகிறார். முதல்வர் என்ன சொல்லப் போகிறார்? பாஜக என்ன சொல்லப் போகிறது?'' எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

edappadi pazhaniswamy ops P chidambaram pmk
இதையும் படியுங்கள்
Subscribe