
தமிழகத்தில் 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல், வேட்புமனு தாக்கல் என அனைத்தையும் முடித்து தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இறுதியாக நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில் கூட்டுறவு வங்கிக் கடன் தள்ளுபடி, வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு போன்ற பல்வேறு அறிவிப்புகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் வன்னியர்களுக்குஇடஒதுக்கீடு வழங்கியது பேசுபொருளானது.

இன்று (30.03.2021) தேர்தல் பிரச்சாரத்தில் துணைமுதல்வர் ஓபிஎஸ், ‘வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு தற்காலிகமானதே’ என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, ''வன்னியர்களுக்கான10.5 சதவீத இடஒதுக்கீடு தற்காலிகமானதே. சாதிவாரியாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டபிறகு, வன்னியர்களுக்கான இடஒதுக்கீடுஉறுதியாகும். குழு தரும் அறிக்கையின் அடிப்படையில் வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு கூடுவதற்கும், குறைவதற்கும் வாய்ப்புள்ளது'' என்றார்.
இதற்கு முன்பேஅமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இதேபோன்ற கருத்தைதெரிவித்திருந்தார். இந்நிலையில், வன்னியருக்கான10.5 சதவீத இடஒதுக்கீடு சட்டம் நிரந்தரமானது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ராமதாஸ் கூறியுள்ளதாவது, ''வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு சட்டத்தை நீக்க முடியாது. அது நிரந்தரமானது. இந்தச் சட்டம் தற்காலிகமானது என சமூகநீதிதெரியாத சிலர் பேசிவருகின்றனர். தற்காலிக சட்டம் என்று ஒன்று இல்லை. மாறாக, மற்றொரு சட்டம் கொண்டுவரும் வரை பழைய சட்டம் நீடிக்கும். 10.5 சதவீத இடஒதுக்கீடு நிரந்தரமானது என முதல்வர் என்னிடம் ஃபோனில் கூறினார். சட்டங்களில் தற்காலிக சட்டம் எனஎதுவும் இல்லை. அனைத்து சமூகத்தினருக்கும் மக்கள் தொகைஅடிப்படையில்இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திய பின் வன்னியர்களின் மக்கள்தொகை 15 சதவீதம் கூடுதல் என்பது உறுதியாகும்'' என விளக்கமளித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)