Advertisment

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடரும் 100வது நாள் போராட்டம்!

ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடைவிதிக்கக் கோரி தூத்துக்குடியில் குமரெட்டியார்புரம் கிராம மக்கள் தொடர்ந்து 100வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment

தூத்துக்குடி மாவட்டம் குமரெட்டியார்புரம் கிராமத்தினர் ஸ்டெர்லைட் ஆலையால் தங்களின் வாழ்வாதாரமும் உடல் ஆரோக்கியமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி போராடி வருகின்றனர். தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் வேதாந்தா குழுமத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை அமைந்துள்ளது. இந்த ஆலையால் சுற்றுச்சூழல் மாசுப்படுவதாகவும் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக கூறி கிராமமக்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தனர்.

இந்நிலையில் வேதாந்தா குழுமம் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்தை மேற்கொள்ள இருந்தது. இது குமரெட்டியார்புரம் அருகே அமைய இருந்ததால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல் உயிர்வாழ தகுதியற்ற நிலை ஏற்படும் என கிராம மக்கள் கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி முதல் பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர். இதனைதொடர்ந்து, குமரெட்டியார்புரம் கிராமமக்களுக்கு ஆதரவாக கடந்த மார்ச் 24ஆம் தேதி முழக்கடையடைப்பு போராட்டம் நடைப்பெற்றது.

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதன் காரணமாக தூத்துக்குடியில் பல்வேறு இடங்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

Advertisment

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி குமாரரெட்டியார்புரம் கிராம மக்கள் நடத்திவரும் போராட்டம் இன்று 100வது நாளை எட்டியுள்ளது. இதனைதொடர்ந்து அப்பகுதி மக்கள் இன்று ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிட்டு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆட்சியர் உத்தரவின்பெயரில், ஸ்டெர்லைட் ஆலையை சுற்றிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இதேபோல், தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு 10 மணி முதல் நாளை காலை 8 மணிவரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Sterlite
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe