கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின்விற்பனை என்பது அதிகரித்துவரும் நிலையில், அதை தடுப்பதற்கு காவல்துறை சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. அண்மையில்,தமிழ்நாடு டிஜிபி உத்தரவின் பேரில் தமிழ்நாடு முழுவதும் ரவுடிகள் அதிரடியாகக் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கஞ்சா விற்பனையாளர்களும் கைது செய்யப்பட்டனர்.
குறிப்பாக, திருவள்ளூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ள நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை தொடர்பாக தகவல் கொடுத்தால் 10,000 ரூபாய் பரிசு என திருவள்ளூர் எஸ்.பி. வருண் குமார் தெரிவித்துள்ளார். புகாரளிக்க, 63799 04848 என்ற வாட்ஸ் அப் எண்ணும் கொடுக்கப்பட்டுள்ளது.