1,000 rupees per month plan for students - special camps today!

Advertisment

கடந்த நிதிநிலை அறிக்கையில் மூவலூர் ராமாமிர்தம் திருமண உதவித்தொகை திட்டம் திருத்தப்பட்டு கல்லூரி மாணவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டுக்கொண்டுவரப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு இன்று முதல் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த திட்டத்துக்காக கலை, அறிவியல் கல்லூரிகளில் இன்று முதல் மாணவிகளின் பெயர்கள் பதிவு செய்யப்படுகின்றன. அரசு பள்ளிகளில் ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயின்றமாணவிகள் இந்த உயர் கல்வித் திட்டத்தில் பயன் பெறுவர்.ஜூன் 30-ஆம் தேதி வரை நடக்கும் சிறப்பு முகாமில் தகுதியான மாணவியின் பெயரை கல்லூரிகள் பதிவு செய்கின்றன. ஆதார், வங்கி கணக்கு புத்தகம், கல்விச் சான்றுகளுடன் மாணவிகளின் பெயர் பதிவு செய்யப்படவுள்ளன.கல்லூரி வாயிலாக அல்லது www.penkalvi.tn.gov.in என்ற இணையதளத்தில் மாணவிகள் நேரடியாக பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.