Skip to main content

ரோட்டில் மாட்டை அலைய விட்டவர்களுக்கு 1000 ரூபாய் அபராதம்!

Published on 13/11/2019 | Edited on 13/11/2019

திருவாரூர் திருத்துறைப்பூண்டி நகர் பகுதிகளில் மாடுகளை தெருக்கள் மற்றும் சாலைகளில் அலைய விட்ட மாட்டு உரிமையாளர்களுக்கு 1000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

 

cow

 

அந்த பகுதிகளில் மாடுகள் அதிக அளவில் போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றித்திரிந்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சியால் மேற்கொள்ளப்பட்ட நிலையில் தற்போது 25 மாடுகளின் உரிமையாளர்களுக்கு தலா 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

  

சார்ந்த செய்திகள்

Next Story

இரவில் நடப்பது என்ன? பாண்டிச்சேரி டூ திண்டிவனம் சாலையில் பரபரப்பு

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
Late night thefts on Pondicherry to Tindivanam road

பாண்டிச்சேரி வார இறுதி நாட்களில் எந்த அளவுக்கு பிரபலமானது என்பது அனைவரும் அறிந்ததே. அதே அளவுக்கு முக்கியமானது பாண்டிச்சேரி டூ திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை, 24 மணி நேரமும் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும். சென்னை செல்லும் வாகனங்களும், பெங்களூரூ திருவண்ணாமலை, செஞ்சி போன்ற நகரங்களுக்கு செல்லும் வாகனங்களும் இந்த சாலையை தான் பிரதானமாக பயன்படுத்துகின்றன. எப்பொழுதும் வாகனங்கள் சென்று கொண்டே இருக்கும்.

இந்த சாலையில் பாண்டிச்சேரி நுழைவாயிலில் இந்தியாவின் பிரபலமான ஜிப்மர் மருத்துவமனை உள்ளது, இந்த மருத்துவமனைக்கு திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு போன்ற பகுதிகளில் இருந்து நோயாளிகள் வருகின்றனர். அதில் திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இந்த சாலையை அதிக அளவு பயன்படுத்துகின்றனர். 

இந்த சாலையில் தான் இப்பொழுது திட்டமிட்டு இரவு நேரங்களில் குறிப்பாக விடியற்காலை நேரத்தில் வாகனங்களை மறித்து கொள்ளை நடப்பதாக நான்கு சக்கர வாகன ஓட்டுனர்கள் தங்களது அனுபவங்களை, சக வாகன ஓட்டுனர்களுக்கு எச்சரிக்கை பதிவாக சமூக ஊடங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

இதுகுறித்து அவர்கள் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் முறையிட்ட போது அவர்கள் நாங்கள் கவனிக்கிறோம் என சொல்கிறார்களே தவிர அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை என்கிறார்கள. தேசிய நெடுஞ்சாலைகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும், அவசர தொடர்புக்கு சுங்கச்சாவடியை தொடர்புகொள்ளும் வசதியை உருவாக்கி வைக்கவேண்டும் என்கிற  நெடுஞ்சாலைத்துறை விதி, சாலையைப் பாதுகாப்பது கட்டணம் வசூலிக்கும் சுங்கச்சாவடிகளின் பொறுப்பு எனக்கூறுகிறது. ஆனால் அவர்கள் அதனை கண்டு கொள்வதில்லை, சாலையை மட்டும் தான் பராமரிப்போம் என்கிறார்கள்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி பாண்டிச்சேரிக்கு சுற்றுலா வரும் பொதுமக்கள் இந்த சாலையை பயன்படுத்துபவர்கள் அச்சத்தில் இருக்கின்றனர். அது 2021 ஆம் ஆண்டு வெளியான பழைய ஆடியோ இப்போது அப்படியல்ல, அங்கு இரவில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்கிற தகவல் பரப்பப்படுகிறது.

Next Story

பைசா செலவில்லாமல் சுகப்பிரசவம்! கவனிக்க வைக்கும் எதிர்ப்பு

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
People are struggle by posting notices in a different way demanding  repair road

திருப்பத்துார் மாவட்டம், பொம்மிகுப்பம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட தாதனவலசை, பழத்தோட்டம், ஓம்சக்தி நகர் கூட்டுரோடு பகுதிகளில் உள்ள சாலைகள் குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கே லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால், கர்ப்பிணிகள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கின்றனர்.

இந்நிலையில் சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும், எந்த நடவடிக்கையும் இல்லை என தெரிகின்றது. இதனால் விரக்தியடைந்த கிராம மக்கள் இப்படிக்கு ஊர் மக்கள் சார்பில், என குறிப்பிட்டு நோட்டீஸ் ஒன்று சுற்றுவட்டார கிராமங்களில் விநியோகம் செய்துள்ளனர் மேலும் பொம்மிக்குப்பம் பல்வேறு பகுதிகளில் நோட்டீஸ் அடித்து ஒட்டி உள்ளனர். 

அதில், இன்றைய காலகட்டத்தில் பல கர்ப்பிணிப் பெண்களின் கனவு சுகப்பிரசவத்தில் குழந்தை பெற்று கொள்வதுதான். இவர்களின் கனவை நனவாக்க அதிசய சாலை திருப்பத்துார் மாவட்டத்தில் உள்ளது. எத்தனையோ மருத்துவர்கள், மகப்பேறு காலத்தில் அறுவை சிகிச்சை செய்தால் தான் தாயும் சேயும் நலமாக இருப்பார்கள் என்று சொல்வது உண்டு. இதனால் மருத்துவ செலவை எண்ணி நினைக்கும் போதே கர்ப்பிணிப் பெண்கள் மனமுடைந்து விடுகின்றனர். 

People are struggle by posting notices in a different way demanding  repair road

அவர்களின் துயரத்தை போக்கத்தான் இங்கு அதிசய சாலை உள்ளது. குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் இந்த சாலையில் தற்செயலாக பயணம் செய்யும் போதே சுகப்பிரசவமாக குழந்தை பெற்று உள்ளனர் என அச்சடிக்கப்பட்டுள்ளது. 

மேலும் குறிப்பு எனக்கூறி, அரசு மருத்துவர்கள் மற்றும் தனியார் மருத்துவர்கள், பொம்மிகுப்பம் ஊராட்சி மன்றத்தின் முறையான அனுமதி பெற்ற பிறகே பயணம் செய்ய வேண்டும். மீறி கர்ப்பிணிப் பெண்கள் பயணம் செய்தால், நாங்கள் பொறுப்பல்ல என்பதை தங்களின் பணிவான கவனத்திற்குத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு வித்தியாசமாக தங்களது எதிர்ப்பினை அந்த கிராம மக்கள் வெளிக்காட்டியுள்ளது பலரது கவனத்தையும் பெற்றுள்ளது.