கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகிலுள்ள மருங்கூர் கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி என்ற முதியவரின் 100 வது பிறந்த நாளை அவருடைய குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கேக் வெட்டி வெகு விமர்சையாக கொண்டாடி மகிழ்ந்தனர். பின்பு, முதியவர் ராமசாமியிடம் மகன்கள், மருமகள்கள், பேத்தி, பேரன்கள் மற்றும் உறவினர்கள் ஆசிர்வாதம் பெற்றனர்.

Advertisment

100 years old farmer celebrate birthday with family

இவர் கடந்த 24.05.1919 அன்று பிறந்தவர். விவசாயக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ராமசாமி, சிவபாக்கியம் என்பவரை திருமணம் செய்து 5 மகன்களை பெற்றெடுத்தார்.கடின உழைப்பால் விவசாயம் செய்து தம் குடும்பத்தை காப்பற்றிய ராமசாமி, எவ்வித நோய் நொடி இல்லாமலும் 100 வயதை கடந்து வந்துள்ளார்.

100 வயது முதியவரிடம் பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் ஆசிர்வாதம் பெற்ற நிகழ்ச்சி நெகிழ்ச்சி அடைய செய்தது. இவரது மகன்களும் தந்தையின் வழியிலேயே தீவிர விவசாயம் செய்து வருகின்றனர்.