தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தியபோதும், கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மேலும் சில புதியகட்டுப்பாடுகளை அமல்படுத்துவது தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு இன்று (24/04/2021) மாலை வெளியிட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
கடந்த 20 ஆம் தேதிமுதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு பின்பற்றப்பட்டு வருகிறது. அதேபோல் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை சென்னையில் சென்னை மாநகராட்சி சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்காக 100 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகசென்னை மாநகரப் பேருந்துக் கழகம் அறிவித்துள்ளது. தூய்மைப் பணியாளர்கள் தங்கள் பணிகளை மேற்கொள்ள குறிப்பிட்ட வழித்தடங்களில் 100 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. உரிய அடையாள அட்டை, முகக்கவசம் அணிந்து பயணிக்க தூய்மைப் பணியாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.