Advertisment

100 பவுன் நகைகளை கொள்ளையடித்த இலங்கை அகதி!  திருட்டு நகைகளை வாங்கிய பிரபல அடகுகடைகாரர் தலைமறைவு!

Husband and wife

கடந்த 15 வருடங்களுக்கு திருச்சி போலீசாருக்குசிம்ம சொப்பமாக இருந்த இலங்கை தம்பதியினர்இலங்கைக்கு விமானம் மூலம் தப்ப முயன்றபோது திருச்சி போலிசில் வசமாக சிக்கி னர். கணவன் மனைவியான தாங்கள் 100 பவுன் நகைகளுக்கு மேல் திருடியுள்ளதாக பகீர் வாக்கு மூலம் கொடுத்துள்ளனர். கைதான இலங்கை அகதிதற்போது சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுயிருக்கிறான்.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

திருவரம்பூர் துவாக்குடியை அடுத்து உள்ள வாழவந்தான் கோட்டையில் வசிக்கும் அகதிகள் முகாமில் வட்டி தொழில் செய்து வருபவர் 50 வயதான இலங்கை அகதி தேவகுமாரி. இவர் கடந்த 4ம் தேதி அய்யம்பட்டி சாலையில் நடந்து செல்லும் போது 3 பேர் கத்தியை காட்டி 10 பவுன் நகைகளை மிரட்டி வாங்கி சென்றனர். இதில் சந்தேகத்தின் பெயரில் அகதிகள் முகாமில் உள்ள சிவகுரு, விக்னேஷ் ஆகியோரை பொதுமக்கள் பிடித்து துவாக்குடி போலிசிடம் ஒப்படைத்தனர். இவர்களின் கூட்டாளி ராஜா என்கிற கெட்டியான் பாண்டி என்பவன் நாமக்கல் அகதிகள் முகாமை சேர்ந்தவன் என்றும் அவன் கணவன் மனைவியாக தலைமறைவாகி இருப்பதும் போலிசுக்கு தெரியவந்ததும் தீவிரவிசாரணையில் இறங்கினர்.

கடந்த 2 மாதங்களாக பூட்டிய வீடுகளில் ஏறி நகைகளை திருடுவது மிக அதிகரித்து வந்தது. எவ்வளவு விழிப்புணர்வுடன் இருந்தும் திருடனுக்கு பூட்டிய வீடு எப்படி சரியாக தெரிகிறது என்கிற கேள்விக்கு விடை கிடைக்காமல் தடுமாறிக்கொண்டிருந்த நிலையில் தான்,இளம் வயது கணவன் மனைவியாக இரண்டு பேர் திருட்டு நடந்த இடத்தில் அருகே உள்ள தெருக்களில் எல்லாம் வீடு வாடகைக்கு கேட்டு வந்திருப்பது தெரியவந்தது.

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

அப்படி வீடு வாடகைக்கு கேட்டு தெருக்களில் சுற்றும்போது பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டமிட்டுபட்டபகலில் அந்த வீடுகளில் தங்கள் கைவரிசைகளை காட்டியிருக்கிறார் என்பதை விசாரணையில் தெரிந்து கொண்டனர். இந்த நிலையில் இந்த தம்பதியினர் குறித்து அனைத்து காவல்நிலையத்திற்கும் தெரியப்படுத்தி வைத்திருந்த நிலையில் இலங்கைக்கு தப்பி செல்வதற்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்த நிலையில் தனிப்படை போலிசாரால் என்.ஐ.டி அருகே பிடிப்பட்டனர்.

பிடிப்பட்டு விசாரணையில் 2004 முதல் சைக்கிள் மற்றும் பைக் திருட்டுவது பழக்கம் ஆகி என்மீது நாமக்கல் காவல்நிலையங்களில் திருட்டு வழக்குகள் பதிவு செய்தனர். இதன் பிறகு 3 வருடம் சிறையில் இருந்து வெளியே வந்ததும் தனியாக இருந்து வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்தேன். இதன் பிறகு தான் திருச்சியை சேர்ந்த விக்னேஷ், சிவகுரு ஆகியோருடன் சேர்ந்து வீடுகளில் கொள்ளையடித்தேன். குறிப்பாக இதுவரைக்கும் 100 பவுனுக்கு மேல் கொள்ளையடித்த நகைகளை எல்லாம் நாமக்கலில் உள்ளஅடகு நகைகடைகளில் வைத்து பணம் பெற்று ஜாலியாக இருந்தோம். தற்போது இலங்கை செல்வதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டேன்.

style="display:inline-block;"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9546799378">

100 பவுன் நகைகளை நாமக்கல் நகை அடகுகடைகளில் அன்றைய நகை விலைக்கே பணம் கொடுப்பதால் அங்கே விற்றேன் என்று அதற்கான ரசீதுகளையும் கொடுத்திருக்கிறான். இதை கேட்டதும் போலிசார் அதிர்ச்சியடைந்தனர்.

இந்த நிலையில் திருவரம்பூர் தனிப்படை போலிசார் திருட்டு நகைகளை வாங்கின நாமக்கல் நகை அடகு கடைக்கு சென்று விசாரணையில் ஈடுபட்டனர். நாங்கள் வாங்கியிருந்தாலும் எங்களால் அந்த நகைகளை திரும்ப கொடுக்க முடியாதுஎன்று நகை அடகு கடையில் பணியில் இருந்தவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.பின்னர் விசாரணைக்கு நகைக்கடையின் மேலாளர் இரண்டு பேரையும் அழைத்து சென்றனர் போலீசார். வாய்ப்பு இருந்தால் அடகு நகைகடை நிர்வாகியையும் விசாரணைக்கு அழைத்திருக்கிறோம் என்கிறார்கள் தனிப்படை அதிகாரிகள்.

Husband and wife
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe