Advertisment

சென்னையில் 100 சதவீதம் மின்சார விநியோகம் சீரமைப்பு

100 percent electricity supply renovation in Chennai

சென்னை மணலியில் 400 கிலோ வாட் திறன் கொண்ட துணை மின் நிலையத்தின் முக்கிய யூனிட்டில் ஒரு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக சென்னையில் பல இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாகச் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இரவு 10.15 மணி முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மின் தடை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் மிகவும் பாதிப்படைந்தனர்.

Advertisment

மணலி, மின்ட் சாலை, வேளச்சேரி, பெசன்ட் நகர், கோடம்பாக்கம், கொளத்தூர், ஓட்டேரி, அயனாவரம், பட்டாளம், மதுரவாயல், புரசைவாக்கம், மந்தைவெளி, தி. நகர், பெரம்பூர், உள்ளிட்ட இடங்களில் மின்தடை ஏற்பட்டது. சூளைமேடு, மயிலாப்பூர், கோடம்பாக்கம், கோட்டூர்புரம், ராயபுரம் மற்றும் திருவான்மியூர் உள்ளிட்ட சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் சென்னையில் மின்தடை ஏற்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு 100% மின்சாரம் விநியோகம் சரி செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

Advertisment
Chennai electicity
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe