திருச்சி மாவட்டம், லால்குடி அருகே மாந்துறை நெருஞ்சாலங்குடி பகுதியைச் சேர்ந்தவர் ஏகாம்பரம். இவரது மனைவி கமலா இருவரும் வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டிற்கு சென்று உள்ளனர். இந்நிலையில், இன்று அதிகாலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
போலீசார் சம்பவ இடத்தில் நடத்திய விசாரணையில், 100 சவரன் தங்க நகைகள், 80 லட்சம் ரொக்கம், 15 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டதுஎன தெரியவந்துள்ளது. மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களுடன் கொள்ளையர்கள் யார் என்பது குறித்து லால்குடி போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.