Skip to main content

மோடி ட்ரம்ப் உருவத்தில் 100 கிலோ இட்லி..! அசத்திய தமிழக சமையல் கலைஞர்..! (படங்கள்)

Published on 24/02/2020 | Edited on 24/02/2020

 

இரண்டு நாட்கள் அரசுமுறை பயணமாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா வந்துள்ளார். ட்ரம்பின் இந்த இந்திய வருகையே நாடு முழுவதும் பேசுபொருளாக  மாறியுள்ளது. இந்நிலையில், சென்னையில் தமிழ்நாடு சமையல்களை தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் பிரதமர் மோடி மற்றும் அதிபர் ட்ரம்பின் உருவங்களை பிரமாண்ட இட்லியில் உருவாக்கியுள்ளனர். இந்த இட்லியை உருவாக்கியவரிடம் பேசிய போது அவர் “எந்த சூழ்நிலையிலும் எந்த நாட்டவரும் சாப்பிடக்கூடிய உடலுக்கு எந்த உபாதைகளும் தராத உணவு இட்லி, இந்த இட்லியை பிரபலபடுத்தும் நோக்கிலும், அமெரிக்க அதிபர் ட்ரம்பின் இந்திய வருகை அனைத்து மக்களுக்கும் பயன் தரக்கூடிய ஒன்றாக அமையவேண்டும் எனற எங்கள் ஆசையை வெளிப்படுத்தும் விதமாகவும் 50 கிலோ எடையுள்ள இட்லியில் மோடி உருவத்தையும், 50 கிலோ எடையில் அதிபர் ட்ரம்ப் உருவத்தையும் உருவாக்கியுள்ளோம்” என தெரிவித்தார். 

 

 

 

சார்ந்த செய்திகள்