
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மாந்துறை நெடுஞ்சாலங்குடி என்ற கிராமத்தில் விவசாயி ஒருவரின் வீட்டில் 100 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெடுஞ்சாலங்குடியில்வசித்து வந்த கமலா என்பவரின் வீட்டில் இருந்து நகை, 12 லட்சம் ரூபாய், 15 கிலோ வெள்ளி கொள்ளை அடிக்கப்பட்ட தகவல்கள் வெளியானது. கமலா திருச்சிக்கு சென்ற கொஞ்ச நேரத்தில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து கொள்ளையர்கள் நகையை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)