Advertisment

இனி நம்பர் பிளேட் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.100 அபராதம்

வலஸ

சென்னையில் நம்பர் பிளேட் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என்று போக்குவரத்து காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

சென்னையில் நம்பர் பிளேட் இல்லாமல் அதிகப்படியான வாகனங்கள் இயக்கப்படுவதாக போக்குவரத்து காவல்துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் வந்ததையடுத்து கடந்த மூன்று நாட்களாக சென்னையில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. இதில் பெரும்பாலான வாகனங்களில் நம்பர் பிளேட் இல்லாமல் இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. மேலும் அந்த வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இந்நிலையில் இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள போக்குவரத்து கூடுதல் ஆணையர், "சென்னையில் நம்பர் பிளேட் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.100 அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து இவ்வாறு நடந்துகொண்டால் வாகன ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

Advertisment

fine
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe