Advertisment

சென்னை மாநகர் பேருந்துகளில் 100% மின்னணு பயணச்சீட்டு!

100% Electronic Ticketing in Chennai City Buses

சென்னை மாநகர் பேருந்துகள் மற்றும் அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் கீழ் இயக்கப்படும் பேருந்துகளில் 100% மின்னணு பயணச்சீட்டு வழங்கும் முறை செயல்படுத்தப்பட்டுள்ளதாக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இது தொடர்பாகத் தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் கீழ் 8 போக்குவரத்துக் கழகங்கள் செயல்படுகிறது. இதில் சென்னை, மாநகர் போக்குவரத்துக் கழகம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் மின்னணு பயணச்சீட்டு இயந்திரம் மூலம் பயணச்சீட்டுகள் வழங்கும் முறை 100% செயல்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, விழுப்புரம் மற்றும் கும்பகோணம் போக்குவரத்துக் கழகங்களில் தற்போது மின்னணு பயணச்சீட்டு இயந்திரம் மூலம் பயணிகளுக்குப் பயணச்சீட்டு வழங்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

Advertisment

100% Electronic Ticketing in Chennai City Buses

மேலும், மற்ற போக்குவரத்துக் கழகங்களில் இந்த நடைமுறை விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவைச் சுட்டிக்காட்டி தமிழக போக்குவரத்துத்துறையின் செயலாளர் பணிந்தரட்டி குறிப்பிடுகையில், “அனைத்து அரசு போக்குவரத்துக் கழகங்களிலும் இயந்திரங்கள் மூலம் மின்னணு டிக்கெட் வழங்கும் முறை மூன்று மாதங்களில் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு சென்னை மெட்டோ ரயில் நிறுவனத்துடன் இணைந்த தேசிய அளவிலான பொது போக்குவரத்து அட்டை கார்டு (NCMC card) விரைவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

bus mtc setc tnstc ticket
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe