மின்னல் வேக கரோனாதொற்று காரணமாக, தேசத்தில் கரோனா பாஸிட்டிவ் எண்ணிக்கை 9,136 பேர்கள் என உயர்ந்த நிலையில், தமிழகத்திலும் அதன் கிராப் 1,173 என்ற அளவில் உள்ளது. இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் சமூக விலக்கான 144 லாக்டவுண் எனப்படும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது, மக்கள் அத்தியாவசியதேவையின் பொருட்டு மட்டுமேவெளியே வரவேண்டும், அப்போதும்சமூக விலக்கை பராமரிக்க வேண்டும்என்று அறிவுறுத்தப்பட்டு, அதனைகாவல் துறையினர் மட்டுப்படுத்தியும் வருகின்றனர். கரோனா அச்சமின்றி சில இடங்களில் மக்கள் இடைவெளியின்றி கூட்டமாக அங்காடிகள் பகுதியிலிருப்பதும் வேதனையின் உச்சம்தான்.

Advertisment

100 day program for curfew !!

இந்த நிலையில், கிராமப்புற அடித்தட்டு மக்களின் 100 நாள் வேலைவாய்ப்பிற்கான சம்பளம் தென்காசி மாவட்டங்களில் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டு வரும் நிலையில், குறிப்பாக சங்கரன்கோவில் யூனியனுக்குப்பட்ட 100 நாள் கிராம மக்களின் கூலி, நகரின் குறிப்பிட்ட வங்கியில் அவரவர் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளன. அதனை எடுத்துக் கொள்ளலாம் என்று அனைத்துப் பயனாளிகளுக்கும் எஸ்.எம்.எஸ். செல்ல, கிராமப்புற மக்கள் கண்ட்ரோல் இல்லாமல் கரோனா அச்சமின்றி அந்த வங்கியின் முன்பு நூற்றுக்கணக்கில் திரண்டு விட்டனர்.

nakkheeran app

Advertisment

100 day program for curfew !!

அதையறிந்த கரோனா தடுப்பு பணியிலுள்ள,சங்கரன்கோவிலின் பொறுப்பு தாசில்தாரான நெல்லை தாசில்தார் ரெங்கநாயகி விரைந்து வந்தார், அவர்நெருக்கடி நிலைமையை எடுத்துச் சொல்லியும் மக்கள் கேட்டபாடில்லை. அதே சமயம் வங்கியின் மேலாளரும் இன்றைக்குக் களப்பாகுளம் பகுதி கிராமத்திற்கே பணம் எடுக்க அனுமதி மற்ற கிராமங்கள் பற்றி பின்னர் அறிவிப்பு வரும். எனவே மற்றவர்கள் கலைந்து செல்லுங்கள் என்றிருக்கிறார் ஆனாலும் கூட்டம் கலைந்த பாடில்லை.

மற்ற யூனியங்களில் பணியாளர்களே திட்டக் கூலிப் பணத்தை நேரிடையாகவே கொண்டு சேர்க்கிறார்கள், அப்படிச் செய்தால் கூட்டம் கூடுவது தவிர்க்கப்படும். ஆனால் இந்த யூனியனில் அதிகாரிகள் தெரிந்தே இப்படி வங்கிக் கணக்கில் செலுத்தியது கூட்டத்தைத் தானே கூட வைக்கும், இதுவும்விதிமீறல்தானே என்கிறார்கள்.

மக்கள் சொல்வதிலும் நியாயம் இருக்கத்தானே செய்கிறது.