10 years imprisonment for the youth who kidnapped  girl

Advertisment

சேலம் அருகே, சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சேலம் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள பீ.மேட்டூர் கே.கே.வலசைச் சேர்ந்தவர் வேலு (35). இவர், சேலத்தை அடுத்த மல்லூரைச் சேர்ந்த 16 வயது சிறுமியை கடந்த 2012ம் ஆண்டு, திருமண ஆசை காட்டிகடத்திச் சென்றுள்ளார். தனி அறையில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில், மல்லூர் காவல்நிலைய காவல்துறையினர் வேலு மற்றும் குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாக அவருடைய நண்பர் பாண்டியன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை, சேலம் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயந்தி, வாலிபர் வேலுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும்6 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார். பாண்டியன் மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால் அவர் விடுவிக்கப்பட்டார். இவ்வழக்கில் அரசுத் தரப்பில் வழக்கறிஞர் பத்மா ஆஜராகி வாதாடினார்.