
நெல்லை மாவட்டத்தில் சிறுமி தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவத்தில், சிறுமி உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள காவல்கிணறு பகுதியில் வசித்துவந்த சிறுமி ஒருவர், வளர்ப்புத் தந்தையால் தீ வைத்துக் கொளுத்தப்பட்டார். அருகில் உள்ள பேக்கரியில் தின்பண்டத்தைத் திருடியதாகக் கூறி எரிக்கப்பட்ட 10 வயது சிறுமி புவனேஸ்வரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது), நாகர்கோவில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்தநிலையில், தற்போது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சிறுமி உயிரிழந்ததைத் தொடர்ந்து கொலை முயற்சி வழக்கைக் கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரித்துவருகின்றனர்.
தின்பண்டம் திருடியதற்காகச் சிறுமி தீ வைத்துக் கொளுத்தப்பட்ட சம்பவமும், அதனைத் தொடர்ந்து சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்ததும் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.