ADVERTISEMENT

10 ஆயிரம் போலீசார் 95 சிசிடிவி கேமராக்கள்; தமிழக டிஜிபி பேட்டி

08:31 PM Oct 28, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக டிஜிபி சைலேந்திரபாபு பேசுகையில், ''பசும்பொன் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு ஐஜி ஆஃப் போலீஸ் தலைமையில் நான்கு டெபுடிக் இன்ஸ்பெக்டர்ஸ், 34 சூப்பிரண்ட் எஸ்பிக்கள், மற்ற காவலர்கள் என சேர்த்து மொத்தம் 10 ஆயிரம் பேர் பாதுகாப்புப் பணியில் நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள். அதற்கான எல்லா நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த முறை முதல் முறையாக நாம் ட்ரோன்களை பயன்படுத்தியிருக்கிறோம். கூட்டத்தைக் கண்காணிக்கவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் திட்டமிட்டு இருக்கிறோம். நிகழ்ச்சிக்கு வரக்கூடிய நபர்கள் போலீசார் பாதுகாப்புடன் சரியான வழிகளில் வந்து மரியாதை செலுத்திவிட்டு வேறொரு வழியில் செல்வதைப் போல் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது.

பசும்பொன் பகுதியில் மட்டும் ஆயிரம் போலீசார் இருப்பார்கள். 95 சிசிடிவி கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பணியில் ஈடுபடப்போகும் போலீசாருக்குத் தேவையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தங்குவதற்கான இடம், உணவு எல்லாவற்றையும் ஏற்பாடு செய்திருக்கிறோம். இப்பொழுது அவர்களுக்கு ஷிப்ட் டூட்டி மட்டும்தான் கொடுக்கிறோம். குறிப்பிட்ட நாள் வரும்போது ஃபுல் டூட்டியில் வருவார்கள். பொதுமக்கள் அமைதியாக வந்து நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான் காவல்துறையின் வேண்டுகோள்'' என்றார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT