Published on 10/08/2020 | Edited on 10/08/2020

கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக பள்ளிகள்,கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 27ல் நடக்கவிருந்த இறுதி தேர்வுகள் ரத்தானது. பள்ளியில் நடைபெற்ற காலாண்டு, அரையாண்டுத் தேர்வின் அடிப்படையில் ரிசல்ட் வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று காலை இணையதளத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு மதிப்பெண் வெளியிடப்படுகிறது.
பள்ளி மாணவர்கள் அளித்த கைபேசி எண்ணிற்கு முடிவுகள் குறுஞ்செய்தி அனுப்பப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.