10 Tamil Nadu fishermen arrested by British Navy

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்கதையாகி வரும் நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் தற்பொழுது பிரிட்டிஷ் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

டிக்கோகார்சியா தீவு அருகே கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 10 மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த நிலையில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக பத்து மீனவர்கள் பிரிட்டிஷ் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் குறித்து மாவட்ட அதிகாரிகளுக்கு இந்திய அமைச்சகம் சார்பில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைது செய்யப்படும் நிலையில் தற்போது பிரிட்டிஷ் கடற்படையால் கைது செய்யப்பட்டு இருப்பது மேலும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.