10 student lost their life be by young man asking him to love her

புதுச்சேரியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவர்கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

புதுச்சேரி வில்லியனூர் அருகே 10 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி நேற்று கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கடந்த சில நாட்களாக சேலத்தை சேர்ந்த மணி என்ற நபர் மாணவியின் செல்போனுக்கு ராங் கால் செய்துள்ளார். அதனால் அந்த மாணவி இது தவறான எண்இனிமேல் ஃபோன் செய்யாதீர்கள் என்று கூறியிருக்கிறார். ஆனால் மணி என்பவர்மாணவிக்கு தொடர்ந்து ஃபோன் செய்து காதலிப்பதாகத்தொந்தரவு செய்திருக்கிறார்.

Advertisment

இதனை வீட்டில் சொன்னால் பிரச்சனை பெரிதாகி விடும் என்று மாணவி மறைத்திருக்கிறார். இருப்பினும் தொடர்ந்து அந்த நபர் தொந்தரவு கொடுக்கவே, ஒரு கட்டத்தில் நடந்த சம்பவத்தை வீட்டில் செல்லியிருக்கிறார். உடனே மாணவியின் அண்ணன் சேலத்தில் இருக்கும் மணிக்கு ஃபோன் செய்திருக்கிறார். அப்போது அவர் தகாத வார்த்தைகளால் திட்டி உங்கள் ஊரில் வந்தே உன்னைக் கொன்றுவிடுவேன்.என்னை உன்னால் ஒண்ணும் செய்ய முடியாது என்று மிரட்டியதாகக்கூறப்படுகிறது. இதையடுத்து மாணவியின் பெற்றோர், நடந்த சம்பவத்தை விளக்கமாகத்தெரிவிக்கும்படி மாணவியிடம் கேட்க, அவர் தன் மீது தன்னுடைய பெற்றோர் சந்தேகப்படுகிறார்கள் என்று கருதி கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து போலீசார், சேலத்தை சேர்ந்தமணி யார் என்று தீவிர தேடுதல் பணியில் இறங்கியுள்ளனர்.