சென்னை கந்தன்சாவடியில் 10 மாடி புதிய கட்டிடத்தின் கட்டுமானப்பணியின் போது சாரம் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இடுபாடுகளுக்கு இடையில் இருந்து 23 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தீயணப்பு வீரர்கள், போலிசார் ஆகியோருடன் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். மீட்பு பணியின்போது பாதி கால்கள் இல்லாமல் ஆண் சடலம் மீட்கப்பட்டது.
இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.