Advertisment

நாகை மீனவர்கள் மீது தாக்குதல்... இலங்கை மீனவர்கள் 10 பேர் மீது வழக்கு!

10 Sri Lankan fishermen sued!

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தஆற்காட்டுத்துறைமீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

இலங்கை மீனவர்கள் அரிவாள், கட்டைகளால் தாக்கியதில் தமிழ்நாடு மீனவர்கள்சின்னதம்பி, அவரது மகன்கள் சிவா, சிவகுமார் ஆகியோர் காயமடைந்துள்ளனர். படுகாயமடைந்த 3 மீனவர்களும் மேல் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மீனவர்களுக்கு ஆட்சியர் அருண்தம்புராஜ்நேரில் ஆறுதல் கூறி,உரியச்சிகிச்சை தர மருத்துவர்களை அறிவுறுத்தினார். தொடரும் இலங்கை மீனவர்கள் தாக்குதலைக் கண்டித்துஆற்காட்டுத்துறைமீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கை மீனவர்களின் தாக்குதலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த வேலைநிறுத்தம் நேற்றுநடைபெற்றது. இரண்டாவது நாளாக இன்றும் வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது. இந்த தாக்குதல் சம்பவம் நாகையில்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

இந்த சம்பவத்தில் மீனவர்களைத் தாக்கி 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 400 கிலோ வலை உள்ளிட்ட பொருட்களை இலங்கை மீனவர்கள் திருடிச்சென்றதாகக்குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில்மீனவர்களைத்தாக்கி கொள்ளையடித்த இலங்கையைச் சேர்ந்த 10 மீனவர்கள் மீதுபோலீசார்வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

srilanga fisherman nagai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe