Skip to main content

25 கிலோ கெட்டுப்போன சிக்கன்... 10 ஷவர்மா கடைகளுக்கு அபராதம்!

Published on 06/05/2022 | Edited on 06/05/2022

 

 10 Shawarma shops fined!

 

கேரளாவில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் கேரளாவில் ஷவர்மாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஷவர்மா போன்ற உணவுகள் தயாரிக்கப்படும் இடங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரியில் படித்துவரும் மாணவர்கள் சிலர் ஷவர்மா சாப்பிட்டு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. தொடர்ச்சியாக ஷவர்மா, பிரியாணி சாப்பிட்டவர்கள் உடல்நலம் பாதிக்கப்படுவது தொடர்பாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில்  10 ஷவர்மா கடைகளுக்கு 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

 

இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் 60 க்கும் மேற்பட்ட கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் ஜெகதீஸ் சந்திரபோஸ் தலைமையில் அதிகாரிகள் கடைகளில் வெட்டப்பட்ட சிக்கன் 3 மணிநேரத்திற்குள் பயன்படுத்தப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்ட நிலையில்  திருவள்ளூர், அம்பத்தூர், ஆவடி, பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் சுகாதாரமற்ற முறையில் இயங்கி வந்த 10 கடைகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதோடு 2,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் அந்த கடைகளில் இருந்து 25 கிலோ கெட்டுப்போன சிக்கன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'உங்கள் குழந்தை செர்லாக் பேபியா?' -எச்சரிக்கை மணி அடித்த உலக சுகாதார அமைப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'Is your child a Cerelac baby?'-World Health Organization has sounded the alarm

நெஸ்லே நிறுவனத்தின் தயாரிப்பான செர்லாக் என்பது ஊட்டச்சத்து உணவு எனப் பொதுவாக குழந்தைகளுக்கு கொடுக்கும் பழக்கம் இந்தியாவில் நீண்ட நெடும் காலமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த 'நெஸ்லே' நிறுவனம் இந்தியாவில் பல்லாயிரம் கோடிக்கு வர்த்தகம் செய்து வருகின்ற நிலையில், நெஸ்லேவின் குறிப்பிடத் தகுந்தத் தயாரிப்பில் ஒன்றாக உள்ளது செர்லாக்.

இந்தநிலையில் IBFAN எனப்படும் Baby Food Action Network என்ற ஐரோப்பிய அமைப்பு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் விற்கப்படும் செர்லாக் எனும் குழந்தைகளுக்கான  ஊட்டச்சத்து உணவை ஆய்வு செய்தது. ஊட்டச்சத்து பொருள் என்று கூறப்படும் செர்லாக்கில் சுவைக்கு அடிமையாக்கி அடிக்கடி உண்ண வைக்கும் அடிக்டிவ் சுகர் என்பது சேர்க்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் மிகவும் குறிப்பிடத்தகுந்தது நெஸ்லேவின் முக்கிய சந்தையாக கருதப்படும் பிரிட்டன், ஜெர்மனி போன்ற நாடுகளில் விற்கப்படும் செர்லாக்கில்  அடிக்டிவ் சுகர் சேர்க்கப்படவில்லை. ஆனால் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் விற்கப்படும் செர்லாக்கில் மட்டும் அடிக்டிவ் சுகர் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் விற்பனையாகும் செர்லாக்கை  குழந்தைக்கு ஒரு முறை ஊட்டுகையில் 2.2 சதவீதம் அடிக்டிவ் சுகர் குழந்தையின் உடலுக்கு செல்கிறது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆனால் இந்தியாவை விட எத்தியோப்பியா போன்ற நாடுகளில் விற்கப்படும் செர்லாக்கில்  அடிக்டிவ் சுகரின் அளவு 5.2 கிராமாக உள்ளது. நெஸ்லேவின் இந்தச் செயல்பாட்டுக்கு உலக சுகாதார அமைப்பு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இளம் வயதிலேயே சர்க்கரை நோய் வருவதற்கும், குழந்தைகள் பார்ப்பதற்கு அளவுக்கு மீறி குண்டாக இருப்பதற்கும் இவையே காரணம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Next Story

பாஜக மாநில நிர்வாகி வீட்டில் பறக்கும்படை சோதனை

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Air force raids BJP state executive's house


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தியுள்ளன.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. அதேநேரம் தேர்தல் பறக்கும் படை பல்வேறு இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் பாஜக மாநில நிர்வாகி ஒருவர் வீட்டில் பறக்கும் படை திடீர் சோதனை நடத்தி வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக ஓபிசி அணி மாநிலச் செயலாளர் கே.ஆர்.வெங்கடேசன் என்பவர் வீட்டில் பறக்கும் படையானது சோதனை நடத்தி வருகிறது. திருவள்ளூரில் பாஜக சார்பில் பணம் பட்டுவாடா செய்வதற்காக நிர்வாகி வீட்டில் பணம் பதுக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலை அடுத்து,  பாடிய நல்லூரில் உள்ள வெங்கடேஷ் வீட்டில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.