புதுச்சேரி அரியாங்குப்பம் மாதா கோயில் விதியில் வசித்து வருபவர்கள் ரமேஷ்குமார், சுபாஷினி தம்பதியினர்.இவர்கள் தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வருகின்றார்கள்.
நேற்று முன்தினம் (14.08.2020) சுபாஷினி தன் மருமகள் உடன் அருகே உள்ள கடைக்கு வீட்டின் கதவை சரியாக பூட்டாமல் சென்றுள்ளார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் உள்ளே சென்று பீரோவை திறந்து அதில் இருந்த 10 சவரன் தங்க நகைகளை திருடி சென்றுள்ளனர். இந்த திருட்டு சம்பவம் குறித்து சுபிக்ஷா அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.