10% seat reservation - Tamil Nadu government invites all party meeting!

Advertisment

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10% இட ஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் நேற்று (07/11/2022) உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இன்று (08/11/2022) பிற்பகல் 12.30 மணியளவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தி.மு.க.வைச் சேர்ந்த வழக்கறிஞரும், மாநிலங்களவை உறுப்பினருமான வில்சன் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டார்.

Advertisment

அப்போது, 10% இட ஒதுக்கீடு விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைபற்றி, அவர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்திய நிலையில், தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, வரும் நவம்பர் 12 ஆம் தேதியன்று சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில்அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்கச் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில், 10% இட ஒதுக்கீடு வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.