திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வடக்குமாவட்டச்செயலாளர் தேவேந்திரன் மற்றும் 10க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள்அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.
இதுதொடர்பாகசெய்தியாளர்கள் சந்திப்பில், 2017 முதல் கட்சிபயணித்ததாகவும் கூட்டணி அமைக்காமல்தனித்துப்போட்டியிடுவதாகத்தொடர்ந்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செயல்பட்டு வருவதால் அதிலிருந்து விலகுவதாக தேவேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், 7 ஆண்டுகள் மேலாகமாவட்டச்செயலாளர்ஆகபயணித்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.
கட்சியில் இருந்துவிலகுவதாக நாம் தமிழர் கட்சி மாவட்டச் செயலாளர் செய்தியாளர்களை சந்தித்துக் கொண்டிருந்த போது, திடீரென உள்ளே நுழைந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின்னர் அது மோதலாக மாறியது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.