10 more ambulances for Cuddalore! Vijayabaskar started!

கடலூர் மாவட்டத்தில் '108' ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஏற்கனவே 38 எண்ணிகையில் இயங்கி வருகின்றன. இந்நிலையில் இன்று (04.09.2020) மாலை கடலூர் வந்திருந்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் 10 புதிய ஆம்புலன்ஸ் வாகனங்களை கொடியசைத்து தொடக்கிவைத்தார்.

Advertisment

இதனால் மாவட்டத்தில் மொத்த ஆம்புலன்ஸ் வாகனங்களின் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளது. இதில் இரண்டு ஆம்புலன்ஸ் வாகனங்கள் வெண்டிலேட்டர் வசதியுடன் கூடியவை. மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி, சென்னை போன்ற ஊர்களுக்கு பரிந்துரைக்கபட்டவர்கள் இந்த வெண்டிலேட்டர் வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ் மூலமாக அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், எம்.சி.சம்பத் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

Advertisment

அப்போது அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறுகையில், " இந்தியாவிலே தமிழகம் தான் கரோனாவை சிறப்பாகக் கையாள்கிறது. தேடிச்சென்று நோய்த் தொற்று கொண்டவர்களைக் கண்டுபிடித்து சிகிச்சை அளிக்கப்படுகிறது" எனக்கூறினார்.

இந்நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சாகமூரி, சட்டமன்ற உறுப்பினர்கள் கே.ஏ.பாண்டியன், வி.டி.கலைச்செல்வன் ஆகியோர் உடனிருந்தனர்.

Advertisment