10 months old baby passed away

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகில் உள்ள உச்சிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் அறிவழகன்(33). இவரது மனைவி பரமேஸ்வரி(29). இவர்களுக்கு 4 வயதில் ஒரு ஆண் குழந்தையும், பிறந்து 10 மாதமான ஒரு ஆண் குழந்தையும் உள்ளன. பரமேஸ்வரி தான் பிறந்த ஊரான தாழநல்லூரில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு சென்றுள்ளார்.

Advertisment

அங்கு பத்துமாத குழந்தை வீட்டின் ஒரு அறையில் தனியாக விளையாடிக் கொண்டிருந்திருக்கிறது. அப்போது வீட்டிற்கு அடிப்பதற்காக பெயிண்ட்டும், அதில் கலக்கும் தின்னர் பாட்டிலையும் வாங்கி அங்கு வைத்திருந்தனர். விளையாடிக்கொண்டிருந்த குழந்தை, தின்னர் பாட்டிலை எடுத்து குடித்தது இதைக் கண்டு பதறிப்போன பரமேஸ்வரி மற்றும் அவரது பெற்றோர் குழந்தையை உடனடியாக கொண்டு சென்று விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை குழந்தை இறந்தது. இதுகுறித்து பெண்ணாடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment