
திருத்தணி அருகே கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த 10 மாத குழந்தை கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த பொதட்டூர்பேட்டையில் வசித்து வந்த ராஜா திவ்யா தம்பதியினருக்கு 10 மாத பெண் குழந்தை உள்ள நிலையில், குழந்தை பேரரசியை கட்டிலில்படுக்க வைத்துள்ளனர். குழந்தையைக் கட்டிலில் போட்டுவிட்டு தாய், தந்தை இருவரும் வீட்டின் வாசற்படி அருகே அமர்ந்து பேசிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. அப்போது உறங்கிக் கொண்டிருந்த குழந்தை கட்டிலில் இருந்து கீழே விழுந்து பீறிட்டு கத்தியுள்ளது. தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் உடனடியாக மீட்கப்பட்ட குழந்தை திருத்தணி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி குழந்தை 10 மாத குழந்தை இறந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.