சிஐடியூ சார்பில் நடத்தப்பட்ட 10 நிமிட வாகன நிறுத்த போராட்டம்! (படங்கள்)

இன்று (10.12.2021) கிண்டி கத்திப்பாராவில் 10 நிமிடங்கள் வாகனங்களை நிறுத்தும் போராட்டத்தை சிஐடியூ அமைப்பினர் நடத்தினர். அதில் 'பெட்ரோல், டீசல், கேஸ் விலைகளை உயர்த்தாதே, குண்டும் குழியுமாக உள்ள சாலைகள் அனைத்தையும் போர்க்கால அடிப்படையில் சீர் செய்' என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தியவாறு போராட்டம் நடத்தினர். அதன் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கலைத்தனர். இதனால் அந்த சாலைகளில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

CITU protest
இதையும் படியுங்கள்
Subscribe