Advertisment

பூட்டை உடைத்து 10 சவரன் தங்க நகை, 50 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த உமராபாத் பேரூராட்சியில் கட்டிட ஒப்பந்ததாரராகவுள்ள அசாருதீன் என்பவர் வீடு உள்ளது. இவரது குடும்பம் இங்குதான் வசித்து வருகிறது. இந்நிலையில் பிப்ரவரி 28ந்தேதி ஆந்திரா மாநிலத்தில் உறவினர் ஒருவரின் திருமணத்துக்கு குடும்பத்தோடு போய்விட்டு மார்ச் 1ந்தேதி காலை வீட்டுக்கு குடும்பத்தோடு வந்துயிருந்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டுயிருந்தது.

Advertisment

 10 loot gold jewelery 50 thousand rupees robbery

அதிர்ச்சியடைந்த அவர்கள் கதவை தள்ளிக்கொண்டு உள்ளே போய் பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 10 சவரன் தங்க நகை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தை கொள்ளை போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

Advertisment

இதுதொடர்பாக அசாரூதின் உமராபாத் காவல்நிலையத்தில் புகார் தந்தார். கொள்ளை நடந்த வீட்டுக்கு வந்த போலிஸ் அதிகாரிகள் தடயங்களை சேகரித்துக்கொண்டும், அக்கம் பக்கம் விசாரித்துவிட்டு சென்றவர், கொள்ளையர்கள் குறித்து தீவிரமாக விசாரணை நடத்திவருகின்றனர்.

forest police Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe