Advertisment

ஈரோடு செய்தியாளர் குடும்பத்திற்கு 10 லட்சம்...!

10 lakh for Erode journalist family ...!

தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்வெற்றிக்குப்பின் தி.மு.க அரசு பொறுப்பேற்ற பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் பத்திரிகையாளர்களையும்முன்களபணியாளர்களாக அறிவித்ததோடு பத்திரிகையாளர்கள்கரோனாவால்பாதிக்கப்பட்டு உயிரிழப்பு நேரிட்டால் அவர்களது குடும்பத்திற்கு 10 லட்சம் அரசு நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்தார். அதன்படி இறந்த செய்தியாளர் குடும்பத்திற்கு தலா பத்து லட்சம் அரசின் நிவாரண உதவி வழங்கினார்.

Advertisment

ஈரோடு மாவட்டத்தில் தனியார்தொலைக்காட்சியானபுதியதலைமுறை தொலைக்காட்சியின் கோபிசெட்டிபாளையம் செய்தியாளர் சந்திரசேகர் என்பவர்கரோனாவைரஸ்ஏற்பட்டு மூன்று மாதங்களுக்கு முன்பு இறந்தார். அதன் தொடர்ச்சியாக 28 ந் தேதி மாலை ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இறந்த சந்திரசேகரின் குடும்பத்தினரிடம் அமைச்சர் சு.முத்துச்சாமி, மாவட்டகலெக்டர்கிருஷ்ணனுன்னி, ஆகியோர் 10 லட்ச ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்கள். தமிழ்நாடு அரசுகேபிள்டி.வி.வாரிய தலைவர் குறிஞ்சி சிவக்குமார் உடனிருந்தார்.

Advertisment

press TNGovernment Erode
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe