Advertisment

நான்கு மீனவர் குடும்பத்திற்கும் தலா 10 லட்சம்... இலங்கை கடற்படைக்கு முதல்வர் கண்டனம்!  

10 lakh each for four fisher families ... Chief Minister condemns Sri Lankan Navy

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி வட்டம் கோட்டைப்பட்டினம் துறைமுகத்தைச் சார்ந்த மீனவர்கள் கடந்த 18-ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்ற பொழுது அவர்கள்சென்ற படகை இலங்கை கடற்படையினர் தாக்கியதோடு விசைப்படகுகளையும் சேதப்படுத்தினர். மீன்பிடித்துக் கொண்டு19-ஆம் தேதி அவர்கள் வந்திருக்க வேண்டிய நிலையில்,காணாமல்போனமீனவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.

Advertisment

10 lakh each for four fisher families ... Chief Minister condemns Sri Lankan Navy

இந்நிலையில், காணாமல் போன மீனவர்களின் உடல் மீட்கப்பட்ட நிலையில்,4 பேர்உயிரிழந்தது தெரியவந்தது. இந்த துயரச் சம்பவத்தில் 4 மீனவர்கள் குடும்பத்திற்கும் தலா 10 லட்சம் ரூபாய் அறிவித்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தாக்குதல் சம்பவம் குறித்து இந்திய தூதரகம் மூலமாக உரிய விசாரணை நடத்த பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளதாகவும், அரசு விதிகளுக்கு உட்பட்டு, உயிரிழந்தநான்கு மீனவர்குடும்பங்களுக்கு அரசு வேலை அல்லது அரசு நிறுவனங்களில் பணி வழங்கவும் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.இதுபோன்ற தாக்குதல் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்திவருவதாகமுதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Advertisment

srilanka edappadi pazhaniswamy fisherman Pudukottai
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe